Category Archives: மனிதன்

தினமும் ஒரு முறையாவது படியுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கவனமாகப் படியுங்கள் நீங்கள் எழுபது வயது வரை உயிர் வாழ்வதாக வைத்துக்கொண்டு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் வயதுகழிந்த நாட்கள்இருக்கின்ற நாட்கள்
20 வயது7,300 நாட்கள்18,250 மீதி நாட்கள்
25 வயது9,125 நாட்கள்16,425 மீதி நாட்கள்
30 வயது10,950 நாட்கள்14,600 மீதி நாட்கள்
35 வயது12,775 நாட்கள்12,775 மீதி நாட்கள்
40 வயது14,600 நாட்கள்10,950 மீதி நாட்கள்
45 வயது16,425 நாட்கள்9,125 மீதி நாட்கள்
50 வயது18,250 நாட்கள்7,300 மீதி நாட்கள்
55 வயது20,075 நாட்கள்5,475 மீதி நாட்கள்
60 வயது21,900 நாட்கள்3,650 மீதி நாட்கள்
65 வயது23,725 நாட்கள்1,775 மீதி நாட்கள்
70 வயது25,550 நாட்கள்இந்த நாட்களைப் புத்திசாலித்தனமாகத் தான் செலவழித்தீர்களா
?

இதில் முக்கியமான கேள்வி உங்களுடைய வாழ்க்கையில் மீதி நாட்களை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது தான்.

ரோமானிய சக்கரவர்த்தியும் தத்துவ ஞானியுமான மார்க்ஸ் அரேலியஸ். கூறியதாவது,

ஆயிரம் வருடம் வாழப் போவதாக நினைத்துக் கொண்டு செயல்படாதீர்கள்

என்று எச்சரித்தார்.

இன்றைய இளைய தலைமுறை பிள்ளைகளின் குறிக்கோள்?

நன்றாக படிப்பது – வேலைக்கு செல்வது…

நல்ல படித்த அழகான பெண்ணை

திருமணம் செய்துகொள்வது…

2 குழந்தைகளை பெற்றுக்கொள்வது…

சொத்து சேர்ப்பது..

இறந்துவிடுவது…

மொழியைப்பற்றி உங்கள் கருத்து?

தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா?

இனத்தை பற்றி உங்கள் கருத்து?

பணத்தை பற்றி மட்டும் பேசுங்கள்.

அரசியல் பற்றி உங்கள் கருத்து?

அது ஒரு சாக்கடை

அதை யார் சுத்தம் செய்வது?

சத்தியமாக நான் இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது

சமூகபிரச்சனை பற்றி உங்கள் கருத்து?

சமூக வலைதளங்களில் பகிர்வதோடு என் பணி முடிஞ்சது.


மிகவும் உன்னதமான குறிக்கோள் அல்லவா இவை… இதையே நீங்களும் செய்ய வேண்டுமா?

வாழ்க்கை மரணத்தைப்பார்த்து கேட்டது;

என்னை அனைவரும் விரும்புகிறார்கள்.

உன்னை மட்டும் வெறுப்பதன் காரணமென்ன?

மரணம் சொன்ன பதில்;

ஏனென்றால் நீ அழகான பொய்.

நான் கசப்பான உண்மை.

இதயத்தின் மரண வாக்கு – பூத்பங்களாவை சற்று கவனி

மூச்சுவிட நினைவிபடுத்திக் கொண்டேயிருக்கும் தலைமைச் செயலாளரே,

கொரோனா காலமாக இருப்பதால், எங்களுக்கு உரிய சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கைகளும், மூக்குகளும் எவ்வளவு கவனமாக இருந்தாலும், எங்கள் ஜோதியில் “கோவிட்-19” கலந்தால் கொண்டாட்டம் தான். நாங்கள் எவ்வளவு பரிதாபகரமாகப் பராமரிக்கப் படுகிறோம் என்பதை வாருங்கள் சொல்கிறேன்.

எனக்கு, நீங்கள் ஒரு நிமிடம் படுத்திருந்தால் 9 லிட்டரும், உட்கார்ந்து இருந்தால் 18 லிட்டரும், நடந்தால் 27 லிட்டர், ஓடினால் 56 லிட்டரும் காற்று தேவையாக இருக்கிறது. நீங்கள் என்னிடம் என்ன சொன்னாலும் நான் அதை செய்யப் போகிறேன். என்னை முறைப்படி இயக்காமல், என்னை பயன்படுத்தாமல் இருந்துவிட்டு பின்பு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்படும் போது அளவுக்கு அதிகமாக உழைக்கச் சொன்னால் எப்படி என்னால் முடியும்?

நான் செயற்பட, போதுமான அளவு சுருங்கி விரிவது அவசியம் தானே!

நான் சுருங்கி விரியும் கொண்டாட்டத்தையும் சொல்லிவிடுகிறேன். சற்று கேள்ளுங்கள், மார்பு அறையையும், வயிற்று அறையையும் பிரிக்கும் பகுதியில் “உதரவிதானம்” என்ற சவ்வு இருக்கிறது. இந்த சவ்வு கீழ் நோக்கி விரியும் போது, நான் விரிகிறேன். வெளியிலிருந்து ஆக்சிஜன் கலந்த இரத்தம் உள்ளே வரும். அதேபோல, இந்த சவ்வு சுருங்கும்போது நான் மேலே அழுத்தப்பட்டு, என்னிடம் சேகரமாகியிருக்கும் “கார்பன்-டை-ஆக்சைடு” சேர்ந்த இரத்தத்தை வெளி சுவாசம் மூலம் வெளியே அனுப்புகிறேன்.

என்னை காற்று அடையும் வழிமுறைகளை சற்று யோசித்துப் பாருங்கள்?…. மூக்கின் வழியாக, அதாவது கோழைப்படலம் வழியாகவும், மூக்கிலுள்ள முடிகள் வழியாகவும் சுத்தப்படுத்தப்பட்டு, தொண்டை பகுதியில் உள்ள இன்னொரு கோழைப்படலத்தால் சுத்தப்படுத்தப்பட்டு, “அக்மார்க்” ஆக்சிஜன் சுவாசக்குழல் வழியாக என்னை அடைகிறது.

மரத்தை கவிழ்த்துப் போட்டது போல், இரு பிரிவுகளாக இருப்பவை, எனது உட்சுவாசக்குழல். இந்த உட்சுவாசக்குழல்கள் மேன்மேலும் கிளைகுழல்களாகப் பிரிந்து, கடைசி அங்கமான நுண்காற்றறைகள் ( ஆல்வியோலை ) என்ற பகுதியை அடைகிறது. இப்பகுதி தான் இதயத்திலிருந்து வரும் இரத்தத்திலிருந்து, கார்பன்-டை- ஆக்சைடைப் பிரிக்கும் மற்றும் ஆக்சிஜன் நிரம்பிய இரத்தத்தைப் மீண்டும் இதயத்திற்கு அனுப்பும் வேலையை செய்கிறது.

நான் நலத்துடன் இருக்க, ஒரு நாளில் குறைந்தபட்ச நேரமாவது, எனக்கு உற்சாகப்படுத்தும் விதமாக, மூச்சிரைக்க ஓட சொல்லுங்கள் அல்லது இன்னபிற மூச்சுப் பயிற்சிகளை செய்ய சொல்லுங்கள். எனது பல அறைகள் “பூத் பங்களா” போல பூட்டிக் கிடக்கும் நிலையில் வைத்துக் கொள்ளாதீர்கள். நகர்ப்புறத்தில் இருக்கும் மாசடைந்த காற்றை சுவாசிப்பதையும், புகைப்பவர்கள் அருகில் போவதையும் தவிர்க்கச் செய்யுங்கள். அடுத்த ஜென்மத்தில்லாவது என்னை பராமரிக்கும், உற்சாகப்படுத்தும், நல்ல மனிதனை அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்…..

மதங்கள் உருவான கதை

ஆதி காலத்தில் ஒரே ஒரு வழிபாடு முறைதான் இருந்தது

உலகமெங்கும் அது இயற்கையை வழிப்படுவதே, பால் கொடுப்பதால் மாட்டை தெய்வமாக்கினார்கள். உலகம் இயங்க ஏதுவாக இருப்பதால் சூரியனை வழிப்பட்டார்கள். தண்ணீர் முக்கியம் என்பதால் மழையை வழிப்பட்டார்கள் சுவாசிக்க காற்று முக்கியம் என்பதால் அதுக்கு வாயு என பெயர் வைத்து வழிப்பட்டார்கள். மரங்கள் பல வித நன்மைகளை கொடுப்பதால் ஒரு தாய் போல வழிப்பட்டார்கள். பத்தி என்பது நன்றி தெரிவித்தலே என்பதாக இருந்தது.

இதுதான் உலகமெங்கும் ஒரே மதம் அது இயற்கை வழிபாடு. இதுவே சனாதன தா்மம் எல்லாரும் பின்பற்ற கூடிய தா்மம் என அறியப்பட்டது. “எப்படி ஓடும் தண்ணீர் ஒரு கல்லின் உருவத்தையே மாற்றுகிறதோ காலத்தால் அதே போல காலமும் மனிதா்களை மாற்றியது.” மனிதா்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கினார்கள், வழி தவறினார்கள். கடவுள் பார்த்தார், இது சரி வராது என்று தன் பிம்பங்களை ஞானிக்களாக இப்பூமிக்கு அனுப்பினார்.

அதுவும் எப்படி?

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அங்கு இருக்கும் மக்களின் தேவைகேற்ப மனநிலைகேற்ப, ஒரு அம்மா. தன் 5 பிள்ளைகளுக்கு ஒரே சமையலையா செய்வாள். ஒவ்வொரு பிள்ளையின் ஜீரண சக்திக்கு ஏற்ற உணவைத்தானே தாய் தருவாள். கடவுள் இந்த உலகத்தின் சிருஷ்டிகா்த்தா. நம் எல்லோருக்கும் சூழ்நிலைகேற்ப வேதங்கள் கொடுத்தார். மொத்தத்தில் கடவுள் ஒன்று வேதம் ஒன்று வேதத்தின் மொழிபெயர்ப்பு மூன்று. (எ.கா) இப்படித்தான் நாம் எடுத்துகொள்ள வேண்டும்.

எனக்கு உருளைகிழங்கு வறுவல் பிடிக்கும்.

என் தம்பிக்கோ உருளைகிழங்கு பொறியல் பிடிக்கும்.

என் சின்ன தம்பிக்கோ உருளைகிழங்கு கூட்டுதான் பிடிக்கும் மற்றொரு தம்பிக்கோ உருளைகிழங்கு வேகவைத்து அப்படியே சாப்பிடுவது பிடிக்கும். உருளைகிழங்கு என்னவோ ஒரு காய்தான் ஆனால் ஒவ்வொருத்தருடைய ருசிக்கு ஏற்ப இது உருமாற்றம் சுவை மாற்றம் ஆகிறது. இப்படி இருக்கும்போது என் கூட்டு தான் சிறந்தது. இல்லை இல்லை என் வறுவல் தான் சிறந்தது. இல்லவே இல்லை என் பொறியல் தான் சிறந்தது என வாதிடுவது எவ்வளவு மடமை???

இந்த உருமாற்றம், சுவை மாற்றத்திற்கு அப்பால் இருக்கும். உருளைகிழங்கே உண்மை என அறிதல் அல்லவோ அறிவார்ந்த செயல்.

உருளைகிழங்கு இடத்தில் மதம்.

இப்போது புரிகிறதா எப்படி மதங்கள் தோன்றின என்று………..