Tag Archives: Future perfect

English grammar basics in Tamil – 10

வணக்கம் நண்பர்களே…

என்ன நண்பா present perfect, Past perfect எப்படி என்ன என்று தெரிந்து கொண்டீர்களா, இப்போது நாம் பார்க்க இருப்பது Future perfect எனப்படும். இவை முன்பு பார்த்ததை விட மிக மிக எளிமையானது.

Future perfect tense

present perfect ல் இரண்டு auxiliary verb பார்த்தோம், past perfect ல் ஒரே auxiliary verb பார்த்தோம் அது போன்று இதிலும் ஒன்று உள்ளது. அது Will have எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

  • will have => i, we, you ,they, he, she, it

ஒரு சிறு குறிப்பு

I,We,You,They,he,she,it + Will have + verb(3rd form)

சரி இந்த future perfect tense யை எங்கு எங்குப் பயன்படுத்த வேண்டும் என ஒரு சிறு குறிப்பு I will have gone to Kashmir by next may / He will have written the letter / They will have gone to Dubai / By next year may, we shall have elections in Tamilnadu என்பன.

Future perfect க்கு மிக முக்கியமான key word – by என்பது, by க்கு பிறகு வருபவை கண்டிப்பாக future யை குறிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

முன்பு சொன்னது தான், எனக்குத் தெரிந்த வரை past perfect மற்றும் future perfect போன்றவை அதிகம் பயன்படுத்துவது இல்லை. ஆனால் பின்பு ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா, இலக்கணத்தில் தெரியவில்லை என்றால் மற்றவர் பேசும் போது என்ன என்று தெரியாமல் நிற்கக் கூடாது அல்லவா அதனால் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது 45% வரை அடிப்படை ஆங்கிலம் என்பது தெரிந்து வைத்துள்ளோம். இதில் எப்படி முழுமை அடைவது என்பனவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு auxiliary verb யை பற்றி சற்று பார்ப்போம்.

Auxiliary verb

நாம் இது வரை பார்த்தவை

am, is, are, was, were, shall, will

  • am – இருக்கிறேன்
  • is – இருக்கிறான் / இருக்கிறாள் / இருக்கிறது
  • are – இருக்கிறோம் / இருக்கிறார்கள் / இருக்கிறீர்கள்

தமிழில் நீ யார்? என்ற கேள்விக்கு நான் கண்ணன் என்றாலே புரிந்துவிடும்.

ஆனால் ஆங்கிலத்தில் யோசிப்பதாக இருந்தால் எப்படி என்று பார்ப்போம்.

present

  • நான் கண்ணன் – I kannan (தவறு)
  • நான் கண்ணன் ஆக இருக்கிறேன். – I am kannan (சரி)

past

  • அவன் முன்பு குழந்தையாக இருந்தான்.
  • he was a child earlier

இது போன்று அதிகமான ஆங்கில வார்த்தை தெரிந்து கொள்ள word power made easy என்ற புத்தகத்தை pdf ல் download செய்து படியுங்கள்.

இது வரை பார்த்தவையே ஒருவர் ஆங்கிலத்தில் interview (அ) நண்பர்களிடம் உரையாடுவதற்கு போதுமானவை. மேலும் நான் மேலே கூறிவுள்ள புத்தகத்தை படித்து பல வாக்கியத்தை உருவாக்கி எனக்கு அனுப்புங்கள். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்கு கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.