Category Archives: Simple past

English grammar basics in Tamil – 3

வணக்கம் நண்பர்களே…

நான் உங்களிடம் கூறியிருந்தேன் ஒரு படத்தின் கதையை ஆங்கிலத்தில் சொல்ல எளிமையான tense உள்ளது என்று, அது வேறு எதுவும் அல்ல Simple past tense தான். Simple present tense யை விட Simple past tense மிக மிக எளிமையானது, simple present tense ல் நிகழ்காலத்தில் நடப்பனவற்றைப் பற்றிப் பேசி மகிழ்ந்திருப்பீர்கள், அத்துடன் கடந்த காலத்தைப் பற்றியும் உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பேசி மகிழ இன்னும் சில நிமிடமே உள்ளது.

Simple past tense

முன்பு பார்த்தது போன்றே, முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது எனப் பார்ப்போம்.

  • நான் எழுதினேன்
  • நீ எழுதினாய்
  • நாங்கள் எழுதினோம்
  • அவன் எழுதினான்
  • அவள் எழுதினாள்
  • அது எழுதியது
  • அவர்கள் எழுதினார்கள்

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். எழுது என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். இங்குப் பார்த்தோமானால் இரண்டு வார்த்தை உள்ளது அவற்றை இப்படி எழுதலாமா எனப் பாருங்கள்.

  • நான் எழுதினேன் => எழுது + இனேன்
  • நீ எழுதினாய் => எழுது + இனாய்
  • நாங்கள் எழுதினோம் => எழுது + இனோம்
  • அவன் எழுதினான் => எழுது + இனான்
  • அவள் எழுதினாள் => எழுது + இனாள்
  • அது எழுதியது => எழுது + இயது
  • அவர்கள் எழுதினார்கள் => எழுது + இனார்கள்

Simple present tense ல் do/ does என இரண்டை பற்றிப் பார்த்தோம். அதைப்போன்றே Simple past tense ல் did என ஒன்றே போதுமானது.

  • நான் எழுதினேன் => I did write
  • நீ எழுதினாய் => You did write
  • நாங்கள் எழுதினோம் => We did write
  • அவன் எழுதினான் => He did write
  • அவள் எழுதினாள் => She did write
  • அது எழுதியது => It did write
  • அவர்கள் எழுதினார்கள் => They did write

இதில் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது, எப்படி Simple present tense ல் do+write(verb)=>write எனவும் does+write(verb)=> writes என எழுதினோமோ அதைப்போன்றே simple past tense ல் verb க்கு second form என்று உள்ளது அதைப் பொறுத்து Simple past tense ல் பேசவும், எழுதவும் வேண்டும். சற்று குழப்புவது போன்று உள்ளதா அது என்ன என்று கூறுகிறேன், இதுதானா என நீங்கள் நினைப்பீர்கள்.

First FormSecond Form
WriteWrote
SleepSlept
ListenListened
TypeTyped
eatate
cookcooked
drinkdrank
sitsat
standstood

இது மாதிரி நிறைய வார்த்தைகள் நமக்குத் தெரியும் அந்த வார்த்தைகளுக்கு second form என்ன என்று தெரிந்தால் போதும். இப்போது மேலே உள்ளவை அனைத்தும் உங்களுக்குத் தெரியும், இது போன்று அதிகமான வார்த்தைகள் உங்களுக்கு உண்மையாகவே தெரியும் நான் இப்போது கூறும் வலைத்தளத்தில் சென்று உங்களுக்குத் தெரிந்தவை, தெரியாதவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். www.grammar.cl அனைவரும் நினைத்துக்கொள்வது நமக்கு ஆங்கிலம் தெரியவில்லை அதனால் தான் பேச முடியவில்லை என்று அது முழுக்க முழுக்க மூடநம்பிக்கையே. இந்த பக்கத்தைப் பாருங்கள் உறுதியாக 50% வார்த்தை தெரியும்.

சரி இந்த past tense ல் சிலவற்றைச் சுலபமாகப் புரிந்து கொண்டேன், ஆனால் write – wrote, sleep – slept, eat – ate, drink – drank, sit – sat என மாற்றுவதில் எனக்குச் சிரமம் இருக்கிறது என உணருகிறீர்களா, ஒன்றும் சிரமம் இல்லை அந்த verb உடன் ed சேர்த்து எழுதலாம் ஆனால் அவ்வாறு எழுதுவது முறையை மாற்றி அமைக்கும் என்பதால் did write எனவும் எழுதலாம். write என்பதற்கு wrote என தெரியவில்லை என அச்சம் வேண்டாம் நமக்கு முன்பு தெரிந்தது போன்றே did என எழுதி அந்த verb யை அப்படியே எழுதவும். குறிப்பாக verb உடன் s, es ,ed எனச் சேர்த்து எழுதக் கூடாது மற்றும் இதைத் தவிர்க்க முடியாத நிலையில் உபயோகப்படுத்துவதில் தவறு இல்லை, முடிந்த வரை verb ன் second form யை பயன்படுத்துவது நல்லது.

Positive

  • Question : Did he write? அவன் எழுதினானா?
  • Answer : Yes, he wrote / Yes, he did write ஆம், அவன் எழுதினான்.
  • Question : Did I sleep? நான் தூங்கினேனா?
  • Answer: Yes, I did sleep ஆம், நான் தூங்கினேன்.
  • Question : Did they eat? அவர்கள் சாப்பிட்டார்களா?
  • Answer : yes, they ate ஆம், அவர்கள் சாப்பிட்டார்கள்.

Negative

  • Question : Didn’t he sleep? அவன் தூங்கவில்லையா?
  • Answer : No, he did sleep இல்லை, அவன் தூங்கிவிட்டான்.
  • Question : Didn’t it go? அது போகவில்லையா?
  • Answer : Yes, it didn’t go ஆம், அது போகவில்லை.
  • Question : Yesterday, didn’t he write? நேற்று, அவன் எழுதவில்லையா?
  • Answer : Yes, he didn’t write ஆம், அவன் எழுதவில்லை.

இவ்வளவு தான் நண்பா, Simple past tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். நாம் simple past tense ல் மிக முக்கியமானவை Did மட்டுமே. அவற்றை முறையாகப் பேசி பழகி சில மணிநேரத்தை அர்ப்பணியுங்கள். மீண்டும் சந்திப்போம்.