Tag Archives: படைப்புகள்

தீபாவளி

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி திருநாளின் பின்னனியில் இருக்கும் நரகாசுரனின் புராண கதை குறித்து விரிவாக பார்ப்போம்…

தீபாவளி புராண கதைகள்
இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் தீபாவளி பண்டிகை மிக முக்கியமான ஒரு பண்டிகை. தற்போது அதன் பின்னணியில் உள்ள புராணக் கதைகள், காரணங்களைத் தாண்டி வியாபாரத்திற்கான முக்கிய பண்டிகையாக மாற்றப்பட்டு வருகின்றது.

நரகாசுரனின் கதை:
நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றோம்.
பூமா தேவியின் புதல்வன் நரகாசுரன். அவனின் தந்தை வராகன். இவன் வானா சுரனுடன் சேர்ந்து மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மிக சக்தி வாய்ந்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகத்தை தாண்டி விண்ணுலகத்தையும் ஆள வேண்டும் என ஆசை கொண்டான்.

வீட்டில் இருள் நீங்கி ஒளி பெற தீபாவளி அன்று லட்சுமி பூஜையை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
இதற்காக அரசவை கூட்டி தன் முடிவை தெரிவித்தார். ஆனால் அவரது அமைச்சர் ஒருவர், தேவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களை வெல்வது சாதாரண விஷயம் அல்ல. அதனால் நீங்களும் சாகா வரம் பெற வேண்டும். அதன் பின்னர் மூன்று உலகத்தையும் நீங்கள் எளிதாக கைப்பற்றலாம் என கூறினார்.

வரம் பெற்ற நரகாசுரன்:
சாகா வரம் வேண்டி கடும் தவம் மேற்கொண்டான் நரகாசுரன். அவன் முன் தோன்றிய பிரம்ம தேவனிடம் சாகா வரம் தரும் படி கேட்டான். ஆனால் பிறந்த ஒருவன் இறந்தே ஆக வேண்டும். அதனால் வேறு ஏதேனும் ஒரு வரம் கேட்க சொன்னார்.

நரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை… உண்மையான புராண கதை தெரியுமா?

இதையடுத்து, தன் தாயின் கையால் தான் இறக்க வேண்டும். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது தான் அவனின் யோசனை. அந்த வரத்தை பிரம்மன் வழங்கினார்.

இறவா வரம் பெற்றதாக எண்ணிய நரகாசுரன் மேலும் தன் கொடுமையை அதிகரித்தான்.நரகாசுரன் தேவலோகத்திற்கு சென்று கைப்பற்றினான். 16,100 தேவர்களையும் கைது செய்தான். அதோடு இந்திரனின் தாய் அதிதியின் காதணியையும் பறித்து சென்றனர் அசுரர்கள்.

அங்கிருந்து தப்பிச் என்ற இந்திரன், தங்களை காப்பாற்றுமாறு மகா விஷ்ணுவிடம் வேண்டினர். தற்போது கிருஷ்ண அவதாரம் நான் எடுத்துள்ளேன். அவரிடம் முறையிடுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார் என்றார்.

தீபாவளி திருநாள் எப்போது?- எப்போது மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்?

நரகாசுரனை அழித்த சத்யபாமா:
கிருஷ்ணரிடம் உதவி கேட்ட இந்திரனிடம், நரகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தார். அவனுடன் போரிடச் செல்வதாக கூறிய கிருஷ்ணரிடம், தானும் வருவதாக அவரது மனைவியான சத்திய பாமா கூறினார்.

நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணன், அவனது சேனைகளைத் துவம்சம் செய்தார். ஆனால் நரகாசுரனின் தாயான பூமாதேவி தான், இந்த அவதாரத்தில் சத்யபாமாவாக,கிருஷ்ணரின் மனைவியாக அவதரித்திருந்தார்.

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் மகாலட்சுமி கோயில் – எங்கிருக்கிறது தெரியுமா?

நரகாசுரனின் சேனையால் தான் காயமடைந்து மயக்கமானது போல் கிருஷ்ணன் நடித்தார். இதனால் மிகவும் கோபமடைந்த சத்யபாமா, நரகாசுரன் மீது அம்பு தொடுத்தான்.

சஷ்டி விரதம் எப்படி இருப்பது, என்ன பலன் கிடைக்கும்?

சத்யபாமாவின் அம்பு துளைக்க நரகாசுரன் மண்ணில் சாய்ந்து உயிரை துறந்தான். அவன் சாகும் தருவாயில் தான் நரகாசுரனுக்கு பூமாதேவியின் அவதாரம் தான் சத்திய பாமா என்றும், நரகாசுரன் தான் அவனின் மகன் என்றும் சத்யபாமாவும் உணர்ந்தார்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு பின் உள்ள பல்வேறு உண்மைகள் தெரியுமா?

தீபாவளி தினத்தில் கங்கா ஸ்நானம், பூஜையின் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தியாகத்திற்கான பண்டிகை:
தன் மகன் என்றும் பாராமல், மக்களை கொடுமைப் படுத்திய நரகாசுரனைக் கொன்ற சத்திய பாமாவின் தியாகத்தை போற்றும் விதமாகவும், நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தைத் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.

கடவுள் படைப்பிலேயே சிறந்தது இது தான்…

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்டு கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்

ஒருநாள், இரு நாள் அல்ல தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்… இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்? என்றது.

அதற்கு கடவுள்,”இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்” இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும், அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்,சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.

அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே கைகள் மட்டும் தான் இருக்கும், என்று விளக்கமாக சொன்னார். இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா? என்று ஆச்சர்யபட்டது தேவதை.

ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டு பார்த்துவிட்டு, ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?என்றது தேவதை. அதற்கு கடவுள் இவள் உடலளவில் மென்னையானவள் ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள் அதனால் எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.

தனக்கு நியாயமாகப் படுகிற விஷியத்துக்காக போராடி சாதிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள் என்றார்.

“ஓ….. இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா? என்று தேவதை கேட்டது.” எல்லா விஷயங்களை பற்றி யோசிக்க மட்டுமல்ல அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும் என்று விவரித்தார் கடவுள். அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, ” இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

அது அவளுடைய கண்ணீர் அவளுடைய சந்தோசம்,துக்கம், கவலை, ஆச்சர்யம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது. என்று பதிலளித்தார் கடவுள். ஆச்சர்யமான தேவதை “உங்கள் படைப்பிலேயே சிறந்தது இது தான்“. இந்த படைப்பில் எந்த குறையும் கிடையாதா? என்றது தேவதை.

தன்னுடைய மதிப்பு என்னெவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது…….. என்று கடவுள் பதிலளித்தார். இக்கதை அனைத்து பெண்களுக்கும், பெண்ணை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தும் அனைத்து ஆண்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.