Tag Archives: simple present

English grammar basics in Tamil – 2

என்ன நண்பா சற்று சிந்தித்துத் தெரியவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடன் வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்களுக்கு நியாயமானக கேள்வி என்ன என்று ஞாபகம் இருக்கிறதா. ஆம் Simple present tense ல் do, does எனப் போட்டுக் குழப்புவதுதான்.

நாம் பார்த்த வாக்கியத்தில் நான் படிகிறேன், நாங்கள் படிகிறோம், நீங்கள் படிகிறீர்கள் என்பன அனைத்தும் positive words ஆகும். simple present tense ல் எப்படி negative words ல் எழுதுவது அதாவது நான் படிக்கவில்லை, நாங்கள் படிக்கவில்லை, நீங்கள் படிக்கவில்லை எனப் பார்த்தோமானால் அதற்குத்தான் not என்பது பயன்படுகிறது.

  • do + not + read => do not read
  • does + not + read => does not read

இவ்வளவுதான் நண்பா இந்த do not read மற்றும் does not read எங்கு எல்லாம் பயன் படுத்தவேண்டும் எனப் பார்த்தோமானால் I, We, You, They இவைகளுக்கு do not read என்றும் He, She, It இவைகளுக்கு மட்டும் does not reads எனவும் எழுதவும். உச்சரிக்கும் போதும் அடுத்தவர்களிடம் பேசும் போதும் do not என்பதை don’t எனவும், does not என்பதை doesn’t எனவும் பயன்படுத்த வேண்டும்.

  • நான் படிக்கவில்லை. => I do not read
  • நீ படிக்கவில்லை. => You do not read
  • நீங்கள் படிக்கவில்லை. => You do not read
  • அவன் படிக்கவில்லை. => He does not read
  • அவள் படிக்கவில்லை. => She does not read
  • அது படிக்கவில்லை. => It does not read
  • நாங்கள் படிக்கவில்லை. => We do not read
  • அவர்கள் படிக்கவில்லை. => They do not read
  • அவை படிக்கவில்லை. => They do not read

இப்போது நமக்கு Simple present tenseல் positive wordsலும், negatie wordsலும் எழுதத் தெரியும். பின்பு என்ன நாம் முன்பு பார்த்த வலைப்பூவில்(blog) உள்ள verb(வினைச் சொல்) அனைத்திற்கும் positive மற்றும் negative ல் எழுதி எழுதிப் பாருங்கள். இல்லையெனில் தமக்கு என ஒரு வலைப்பூவை(blog) உருவாக்கி அதில் பதிவிடுங்கள். அதை தமக்கு அனுப்புங்கள்.

தமிழில் ஒரு பழமொழி உள்ளது.

சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

ஒரு குழந்தை தமிழை ஒரே நாளில் பேசாது, அது பேசி பேசி வருடக் கணக்காகும் அல்லவா அது போல ஆங்கிலம் படிக்க வேண்டுமா நான் முன்பு சொன்னதை போலக் கூடுதலாக சில மணிநேரங்கள் அர்ப்பணியுங்கள் பின்பு உங்களிடமே கேட்டுப் பாருங்கள் என்னால் முடியுமா? என நிச்சயம் பதில் உங்களிடமே கிடைக்கும்.

பயிற்ச்சி

(எ.கா) எடு, துலக்கு, குளி, மாற்று, சாப்பிடு, கழுவு, உட்கார், படி, போ, வாங்கு, திரும்பு, வை, பார்.

Take, brush, bath, change, eat, sit, read, study, go, buys, turn, see.

எடு – take

  • நான் எடுக்கிறேன். => I take
  • நீ எடுக்கிறாய். => You take
  • நீங்கள் எடுக்கிறீர்கள். => You take
  • அவன் எடுக்கிறான். =>He takes
  • அவள் எடுக்கிறாள். =>She takes
  • அது எடுக்கிறது. => It takes
  • நாங்கள் எடுக்கிறோம். => We take
  • அவர்கள் எடுக்கிறார்கள்.=> They take
  • அவை எடுக்கின்றன. => They take
  • நான் எடுக்கவில்லை. => I do not take
  • நீ எடுக்கவில்லை. => You do not take
  • நீங்கள் எடுக்கவில்லை. => You do not take
  • அவன் எடுக்கவில்லை. =>He does not take
  • அவள் எடுக்கவில்லை. =>She does not take
  • அது எடுக்கவில்லை. => It does not take
  • நாங்கள் எடுக்கவில்லை. => We do not take
  • அவர்கள் எடுக்கவில்லை.=> They do not take
  • அவை எடுக்கவில்லை. => They do not take

துலக்கு-Brush

  • I brush
  • We brush
  • You brush
  • He brushes
  • She brushes
  • It brushes
  • They brush

  • I do not brush
  • We do not brush
  • You do not brush
  • He does not brush
  • She does not brush
  • It does not brush
  • They do not brush

மாற்று-change

  • I change
  • We change
  • You change
  • He changes
  • She changes
  • It changes
  • They change
  • I do not change
  • We do not change
  • You do not change
  • He does not change
  • She does not change
  • It does not change
  • They do not change

சாப்பிடு-eat

  • I eat
  • We eat
  • You eat
  • He eats
  • She eats
  • It eats
  • They eat
  • I do not eat
  • We do not eat
  • You do not eat
  • He does not eat
  • She does not eat
  • It does not eat
  • They do not eat

மேலும் இது போன்று பலவற்றை எழுதியும், பேசியும், நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியும் வாருங்கள். கண்டிப்பாக ஆங்கிலம் எளிமையே.

கேள்வி கேட்பது எப்படி ?

சரி இப்போது simple present tense ல் எப்படி நான் எனது நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கேள்வி கேட்பது என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஆங்கிலம் மீது ஒரு பற்று வந்து விட்டது என்று தானே அர்த்தம். அதையும் சொல்லி விடுகிறேன் முழுமையாகப் பேசி மகிழுங்கள்.

நாம் தமிழில் கேள்வி கேட்போம் அவன் எழுதுகிறானா?, அவள் எழுதுகிறாளா?, அது எழுதுகிறதா? என அதற்கு ஆம் (அ) இல்லை என்ற பதிலை நீங்கள் கேட்பவர் பதில் கூறுவார்.

அவ்வளவுதானே மிக எளிமையான கேள்வி, நமக்கு ஏற்கனவே தெரியும் He + does + read => He reads என மாறி அவன் படிக்கின்றான் என மாறியது. அவன் படிக்கிறானா? என நாம் மற்றவர்களிடம் கேட்க Does + he + read => Does he read? என்று கேட்கவும். அதற்கான பதிலை ஆம் என்றால் yes எனவும் இல்லை என்றால் no எனவும் சொல்லவும்.

Positive

  • Question: Does he write? அவன் எழுதுகிறானா?
  • Answer : Yes, he writes ஆம், அவன் எழுதுகிறான்.
  • Question : Do they read? அவர்கள் படிக்கிறார்களா?
  • Answer : No, they do not read இல்லை, அவர்கள் படிக்கவில்லை
  • Question : Does she take? அவள் எடுக்கிறாளா?
  • Answer : No, she does not take இல்லை, அவள் எடுக்கவில்லை.

Negative

  • Question : Don’t I write? நான் எழுதவில்லையா?
  • Answer : Yes, I do not write. ஆம், நான் எழுதவில்லை.
  • Question : Doesn’t he read? அவன் படிக்கவில்லையா?
  • Answer : No, he does not read இல்லை, அவன் படிக்கவில்லை
  • Question : Don’t they take? அவர்கள் எடுக்கவில்லையா?
  • Answer : Yes, they do not take. ஆம், அவர்கள் எடுக்கவில்லை.

இவ்வளவு தான் நண்பா, Simple present tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். நாம் simple present tense ல் மிக முக்கியமானவை Do / Does மட்டுமே. அவற்றை முறையாகப் பேசி பழகி சில மணிநேரத்தை அர்ப்பணியுங்கள்.

அடுத்துப் பார்க்க இருக்கும் tenseயை வைத்து ஒரு முழு படத்தின் கதையையே சொல்லிவிடலாம் அவை என்ன என்று சிந்தித்து கரும்பலகையில் பதிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

English grammar basics in Tamil -1

வணக்கம் நண்பர்களே…

நாம் பார்க்க இருக்கும் இந்த வலைப்பூவில்(Blog) ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது, எப்படி உச்சரிப்பது, எப்படிப் பேசுவது போன்றவற்றைப் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம். இந்த வலைப்பூவில் முழுக்க முழுக்க ஆங்கிலம் என்றாலே பயம் என்பவர்க்கும், ஆங்கிலத்தில் ஒரு வாக்கியமும் (Sentence) எழுதத் தெரியாது என்பவர்க்கு (அ) தமிழ் வழியில்(Tamil Medium) பள்ளிக்கூட வாழ்க்கையை முடித்ததால் ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைப்பவர்க்கு மற்றும் மிக மிக அடித்தளத்தில் இருக்கும் நண்பர்களுக்கும், கிராமப் புற நண்பர்களுக்கும் எளிமையில் புரியும் வகையில் நான் எனது அனுபவத்தைப் பகிர்கின்றேன். நான் உறுதியாகக் கூறுகிறேன் தமிழைப் போன்றே ஆங்கிலமும் மிக எளிமையானது அதை நீங்கள் 100% நம்பலாம். இது எனது புதிய முயற்சி எவையேனும் மாற்றம் (அ) கருத்துகள் இருந்தால் கருத்து பலகை (Comment) மூலம் கருத்துகளைப் பதிவிடுங்கள்.

என்னால் முடியுமா?

ஒரே நாளில் சாதித்தவர்கள் என்று யாரும் கிடையாது. அனைவரும் பல நாட்கள், பல மணிநேரங்கள் அவர்களது இலக்கில் அர்ப்பணித்துத் தானே சாதனை படைத்திருப்பார்கள். அது போல நீங்களும் பல நாட்கள், பல மணிநேரங்கள் அர்ப்பணியுங்கள் என்று சொல்லமாட்டேன், ஒரு நாட்களுக்கு ஒரு மணிநேரம் அதாவது உங்கள் மனம் அமைதியாக இருக்கும் நிலையில் ஒரு மணிநேரம் அர்ப்பணியுங்கள். பின்பு தான் என்னால் முடியுமா என்ற கேள்விக்குப் பதில் உங்களிடமே கிடைக்கும். மற்றவர்கள் உன்னால் முடியும் என்று கூறுவதைவிட நம் மனதில் உருவாகும் நம்பிக்கைக்கு ஈடு இணையே இல்லை. அதை நான் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் அந்த சில மணிநேரம் கொடுத்தீர்களா என்பதை உங்களிடம் கேட்டுப் பாருங்கள்?

ஆங்கிலம் யாருக்குக் கடினம், யாருக்கு எளிமை?

ஆங்கிலம் கற்றல் என்பது யார்க்கு மிகமிக கடினம், யார்க்கு மிகமிக எளிமை என்பதைப் பார்த்தோமானால் ஒரு குழந்தைக்கு மிகமிக கடினம், ஏனென்றால் அந்த குழந்தைக்கு ஏற்கனவே ஒரு மொழி கூட தெரிந்து இருக்காது, அதனால் மற்றொரு மொழி கற்றல் என்பது மிக மிகக் கடினம். ஆனால் நமக்கு அத்தகைய கடினமில்லை ஏனென்றால் நமக்கு ஏற்கனவே மிகப் பெரிய மொழியான தாய்மொழி தமிழ் நமக்குத் தெரியும். தமிழுக்கு மற்றும் அல்ல யாருக்கு எல்லாம் ஒரு மொழி ஏற்கெனவே தெரிந்திருக்கிறதோ அவர்கள் மற்றொரு மொழி படிப்பதில் எந்தவித சிரமமும் இருக்காது.முதலில் நமது திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம்…

ஆங்கிலத்திற்கு மிக மிக அடித்தலமாக இருப்பது Tenses எனப்படும். அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அடிப்படியாகத் தெரிந்திருக்க வேண்டியவை சிலவற்றைக் காணலாம்.

  1. Tenses
    1. Simple present
    2. Simple past
    3. Simple Future
    4. Present Continuous
    5. Past Continuous
    6. Future Continuous
    7. Present perfect
    8. Past perfect
    9. Future perfect
    10. Present perfect continuous
    11. Past perfect continuous
    12. Future perfect continuous
  2. Sentence Patten
  3. Active voice
  4. Passive voice
  5. Direct speech
  6. Indirect speech
  7. Simple,Complex,Compound

இவைதான் நாம் படிக்க இருக்கும் பொருளடக்கம் எனலாம். இதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வேறு எதுவும் இல்லை. இப்போது பார்த்தால் Grammar இல்லாமலே நன்றாகப் பேசலாம், மற்றவர்கள் பேசுவதையும் புரிந்து கொள்ளலாம். இது யாருக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் எனப் பார்த்தோமானால், கண்டிப்பாக  மின்னஞ்சல்(Email) எழுதுபவர்களுக்கும், எவையேனும் கட்டுரை(Essay) எழுதுபவர்களுக்கும் பயன்படும். நன்றாகப் பயிற்சி செய்பவர்க்கு ஆங்கிலம் மீது உள்ள அச்சமோ, வெறுப்போ கண்டிப்பாகக் குறையும்.

Simple Present Tense

முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது எனப் பார்ப்போம்.

  • நான் படிக்கிறேன்.
  • நீ படிக்கிறாய்.
  • நீங்கள் படிக்கிறீர்கள்.
  • அவன் படிக்கிறான்.
  • அவள் படிக்கிறாள்.
  • அது படிக்கிறது.
  • நாங்கள் படிக்கிறோம்.
  • அவர்கள் படிக்கிறார்கள்.
  • அவை படிக்கின்றன.

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,நீங்கள்,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்,அவை) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,Your,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். படி என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். இங்குப் பார்த்தோமானால் இரண்டு வார்த்தை உள்ளது அவற்றை இப்படி எழுதலாமா எனப் பாருங்கள்.

  • நான் படிக்கிறேன். => படி + கிறேன்
  • நீ படிக்கிறாய். => படி + கிறாய்
  • நீங்கள் படிக்கிறீர்கள். => படி + கிறீர்கள்
  • அவன் படிக்கிறான். => படி + கிறான்
  • அவள் படிக்கிறாள். => படி + கிறாள்
  • அது படிக்கிறது. => படி + கிறது
  • நாங்கள் படிக்கிறோம். => படி + கிறோம்
  • அவர்கள் படிக்கிறார்கள். => படி + கிறார்கள்
  • அவை படிக்கின்றன. => படி + கின்றன

படி என்பதற்கு ஆங்கிலத்தில் (Study, Read) எனலாம். நாம் read என வைத்தோமானால் நான் படி, நீ படி, நீங்கள் படி எனச் சொல்ல முடியாது அல்லவா அப்போது எப்படிச் சொல்லவேண்டியது இருக்கும் நான் படிக்கிறேன், நீ படிக்கிறாய், நீங்கள் படிகிறீர்கள் என்று தானே சொல்லுவோம். படி எனத் தமிழில் எழுதுவதற்குத் தான் வினைச்சொல்(verb) என்று பெயர். கிறேன்,கிறாய் என உடன் எழுதுகிறோம் அல்லவா அதற்குத் துணை வினைச்சொல்(auxiliary verb) என்று பெயர்.

  • படி – வினைச் சொல் => verb
  • கிறீர்கள், கிறார்கள், கிறோம் – துணை வினைச்சொல் => auxiliary verb

இப்போது (நான்,நீ,நீங்கள்,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்,அவை) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,Your,He,She,It,We,They) என்ன என்று தெரியும் மற்றும் படி என்பதற்கு read என்று தெரியும் அல்லவா. இதனுடன் (கிறீர்கள், கிறார்கள், கிறோம்) என்பதற்கும் ஆங்கிலத்தில் தெரிந்துவிட்டால் இன்று நமக்கு simple present tense முடிந்தது என அர்த்தம் அவை இன்னும் சில நிமிடங்களில் முடிந்து விடும்.

கிறீர்கள், கிறார்கள், கிறோம் என்பதற்கான auxiliary verb என்னவென்று பார்த்தோமானால் do மற்றும் does , இந்த do மற்றும் does உடன் verb சேர்த்தோமானால் முடிந்தது.

  • do + read => read
  • does + read => reads

இவ்வளவுதான் நண்பா இந்த read மற்றும் reads எங்கு எல்லாம் பயன் படுத்தவேண்டும் எனப் பார்த்தோமானால் I, We, You, They இவைகளுக்கு அப்படியே read என்றும் He, She, It இவைகளுக்கு மட்டும் reads என எழுதவும்.நீங்கள் உங்கள் note,pen எடுத்து நீங்கள் அந்த சில மணிநேரத்தை அர்ப்பணிக்கத் தொடங்குங்கள்.

  • நான் படிக்கிறேன். => படி + கிறேன் => I read
  • நீ படிக்கிறாய். => படி + கிறாய் => You read
  • நீங்கள் படிக்கிறீர்கள். => படி + கிறீர்கள் => You read
  • அவன் படிக்கிறான். => படி + கிறான் => He reads
  • அவள் படிக்கிறாள். => படி + கிறாள் => She reads
  • அது படிக்கிறது. => படி + கிறது => It reads
  • நாங்கள் படிக்கிறோம். => படி + கிறோம் => We read
  • அவர்கள் படிக்கிறார்கள். => படி + கிறார்கள் => They read
  • அவை படிக்கின்றன. => படி + கின்றன => They read

இதே மாதிரி நீங்களும் எழுதிப் பாருங்கள். எதைப்பற்றி எழுதுவது எனத் தெரியவில்லையா நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இதுவரை என்ன செய்தீர்களோ அதை முதலில் தமிழில் அந்த verbயை மட்டும் எழுதுங்கள் பின்பு ஆங்கிலத்தில் அதை மாற்றுங்கள். (எ.கா) எழு, துலக்கு, குளி, மாற்று, சாப்பிடு, கழுவு, உட்கார், படி, போ, வாங்கு, திரும்பு, வை, பார், எடு, அனுப்பு, சிரி இங்கு உள்ள அனைத்திற்கும் உங்களுக்கு ஆங்கிலத்தில் தெரியும் அல்லவா.

அவ்வளவு தான் simple present tense முடிந்தது. ஒன்றுமே இல்லை அல்லவா He, She, It வந்தால் verb உடன் s சேருங்கள் என்று சுலபமாக முடித்திருக்கலாமே… என்று தானே நினைக்கிறீர்கள். அப்படி நினைத்தால் நீங்கள் சரியாக simple present tenseயை படித்து முடித்துவிட்டீர்கள். சரி எதற்காக do, does எனப் போட்டுக் குழப்புகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது நியாயமான கேள்விதான். நீங்களும் சற்று சிந்தித்துப் பாருங்கள் இல்லை என்றால் ஏனென்று தெரிந்து கொள்ள English grammar basics in tamil – 2 வை பாருங்கள்.