Tag Archives: Past perfect

English grammar basics in Tamil – 9

வணக்கம் நண்பர்களே…

என்ன நண்பா present perfect எப்படி என்ன என்று தெரிந்து கொண்டீர்களா, இப்போது நாம் பார்க்க இருப்பது past perfect எனப்படும். இவை present perfectயை விட மிக மிக எளிமையானது.

Past perfect tense

present perfect ல் இரண்டு auxiliary verb பார்த்தோம் அல்லவா ஆனால் past perfect ல் ஒரே auxiliary verb தான். அது had எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம் மற்றும் நாம் புதிதாகப் படித்த Third Form * (Past participle) யை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

  • had => I, We, You, He, She, It, They.

அவ்வளவு தான் நண்பா, அனைத்திற்கும் had சேர்க்க வேண்டும்.

  • I had seen
  • We had seen
  • You had seen
  • He had seen
  • She had seen
  • It had seen
  • They had seen

ஒரு சிறு குறிப்பு I,We, You, He, She, It, They + had + verb(3rd form)

Positive

  • Question : Had I seen?
  • Answer : Yes, I had seen
  • Question : Had He drunk?
  • Answer : Yes, he had drunk
  • Question : Had they studied?
  • Answer : yes, they had studied.

Negative

  • Question : Had not you gone?
  • Answer : Yes, you had not gone
  • Question : Hadn’t she listened?
  • Answer : Yes, she hadn’t listened
  • Question : had he eaten?
  • Answer : No, he had not eaten

எனக்குத் தெரிந்த வரை past perfect மற்றும் அடுத்துப் பார்க்க இருக்கும் future perfect போன்றவை அதிகம் பயன்படுத்துவது இல்லை. ஆனால் பின்பு ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா, இலக்கணத்தில் தெரியவில்லை என்றால் மற்றவர் பேசும் போது என்ன என்று தெரியாமல் நிற்கக் கூடாது அல்லவா அதனால் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வளவு தான் நண்பா, Past perfect tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.