Category Archives: past continuous

English grammar basics in Tamil – 6

வணக்கம் நண்பர்களே…

என்ன நண்பா தொடர் நிகழ்காலம் என்ன என்று சென்ற வலைப்பூவில் அறிந்து கொண்டீர்களா, இன்று நாம் பார்க்க இருப்பது தொடர் இறந்த காலம்(past continuous tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) present continuous tense யை பற்றிப் பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். அதைப் போன்றே past continuous tense லும் சில குறிப்புகள் உள்ளது, அவை என்ன என்று பார்க்கலாம்.

Past continuous tense

முன்பு பார்த்தது போன்றே, முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது எனப் பார்ப்போம்.

  • நான் படித்துக் கொண்டு இருந்தேன்.
  • நீ படித்துக் கொண்டு இருந்தாய்.
  • நாங்கள் படித்துக் கொண்டு இருந்தோம்.
  • அவன் படித்துக் கெண்டு இருந்தான்.
  • அவள் படித்துக் கொண்டு இருந்தாள்.
  • அது படித்துக் கொண்டு இருந்தது.
  • அவர்கள் படித்துக் கொண்டு இருந்தார்கள்.

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். படி என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். சரி இவை அனைத்தும் நாம் present continuous tense லே படித்துத் தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த கொண்டு இருந்தேன், கொண்டு இருந்தாய் என்பனவற்றை எப்படிச் சொல்ல வேண்டும் எனப் பார்க்கலாம்.

படி என்பதற்கு read எனத் தெரியும், படித்துக் கொண்டு என்பதற்கு verb உடன் ing சேருங்கள் reading எனப்படும். I reading, you reading என்றால் நான் படித்துக் கொண்டு, நீ படித்துக் கொண்டு என்று பொருள். ஆனால் இருந்தேன், இருந்தோம் என்று எப்படி இங்குக் கூறுவது எனப் பார்த்தோமானால் அதற்குத் தான் simple past tense ல் பார்த்தது போன்று auxiliary verb உள்ளது. அது was, wereஎனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

  • Was => I , He, She, It
  • Were => We, You, They

அவ்வளவு தான் நண்பா, நீங்கள் உங்கள் note,pen எடுத்து நீங்கள் அந்த சில மணிநேரத்தை அர்பணிக்த் தொடங்குங்கள்.

  • I was reading.
  • You were reading.
  • We were reading.
  • He was reading.
  • She was reading.
  • It was reading.
  • They were reading.

ஒரு சிறு குறிப்பு past continuous tense ல் was / were + verb + ing

மிக எளிமையாக இதை புரிந்துக் கொள்ள present continuous tense ல் எங்கு எங்கு am, is, are பயன்படுத்திநோமோ அதற்கு பதிலாக was, were என சேர்த்தால் போதும்.

சரி இந்த past continuous tense யை எங்கு எங்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு சிறு குறிப்பு all last night / all yesterday / all afternoon / hole night / hole night it was raining, all last night it was raining here, all last week we were playing என்பன.

Positive

  • Question : Was I reading?
  • Answer : Yes, I was reading
  • Question : Was he writing?
  • Answer : Yes, he was writing
  • Question : Were they sleeping?
  • Answer : No, they were not sleeping

Negative

  • Question : wasn’t he writing?
  • Answer : Yes, he was not writing
  • Question : Weren’t we running?
  • Answer : no, we were not running
  • Question : Was not i watching?
  • Answer : yes, i was not watching.

இவ்வளவு தான் நண்பா, Past continuous tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.