English grammar basics in Tamil – 4

வணக்கம் நண்பர்களே…

இன்று நாம் பார்க்க இருப்பது எதிர்காலம் (Future tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) simple present tense, simple past tense யை பற்றிப் பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். அதைப் போன்றே future tense லும் சில குறிப்புகள் உள்ளது, அவை என்ன என்று பார்க்கலாம்.

Simple Future tense

முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது எனப் பார்ப்போம்.

  • நான் போவேன்.
  • நீ போவாய்.
  • நாங்கள் போவோம்.
  • அவன் போவான்.
  • அவள் போவாள்.
  • அது போகும்.
  • அவர்கள் போவார்கள்.

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். போ என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். இங்குப் பார்த்தோமானால் இரண்டு வார்த்தை உள்ளது அவற்றை இப்படி எழுதலாமா எனப் பாருங்கள்.

  • நான் போவேன். => போ + ஏன்.
  • நீ போவாய். = > போ + வாய்.
  • நாங்கள் போவோம். =>போ + வோம்.
  • அவன் போவான். => போ + வான்.
  • அவள் போவாள். => போ + வாள்.
  • அது போகும். => போ + கும்.
  • அவர்கள் போவார்கள். => போ + வார்கள்.

Simple present tense ல் do/ does என இரண்டை பற்றிப் பார்த்தோம். Simple past tense ல் did என ஒன்றைப் பார்த்தோம். அதைப்போன்றே Simple future tense ல் shall / will என இரண்டு உள்ளது.

இவ்வளவுதான் நண்பா இந்த shall மற்றும் will எங்கு எல்லாம் பயன் படுத்தவேண்டும் எனப் பார்த்தோமானால் I, We, இவைகளுக்கு மட்டும் shall என்றும் He, She, It You, Theyஇவைகளுக்கு will என எழுதவும்.

நீங்கள் உங்கள் note,pen எடுத்து நீங்கள் அந்த சில மணிநேரத்தை  அர்ப்பணிக்கத் தொடங்குங்கள்.

  • நான் போவேன். => I shall go
  • நீ போவாய். => You will go
  • நாங்கள் போவோம்.=> We shall go
  • அவன் போவான்.=> He will go
  • அவள் போவாள்.=> She will go
  • அது போகும்.=> It will go
  • அவர்கள் போவார்கள்.=> They will go

Positive

  • Question : Will you go?
  • Answer : Yes, you will go
  • Question: Shall we stop?
  • Answer : Yes, we shall stop
  • Question : Shall i go?
  • Answer : Yes, I shall go

Negative

  • Question : Won’t you watch?
  • Answer : Yes, i won’t watch
  • Question : Won’t he go?
  • Answer : Yes, he won’t go
  • Question : Won’t you read?
  • Answer : Yes, you won’t read

இவ்வளவு தான் நண்பா, Simple Future tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். Simple Future tense ல் மிக முக்கியமானவை Shall / will மட்டுமே. அவற்றை முறையாகப் பேசி பழகி சில மணிநேரத்தை அர்ப்பணியுங்கள். மீண்டும் சந்திப்போம்.

Leave a comment