Category Archives: present continuous

English grammar basics in Tamil – 5


வணக்கம் நண்பா்களே…

இன்று நாம் பார்க்க இருப்பது தொடர் நிகழ்காலம்(Present continuous tense), தொடர் இறந்தகாலம்(Past continuous tense), தொடர் எதிர்காலம்(Future continuous tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) simple present tense, simple past tense, simple future tense யை பற்றிப் பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். அதைப் போன்றே இந்த continuous tense லும் சில குறிப்புகள் உள்ளது, அவை என்ன என்று பார்க்கலாம்.

என்ன நண்பா நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்பன தெரியும் ஆனால் இது என்ன தொடர் நிகழ்காலம்,தொடர் இறந்தகாலம், தொடர் எதிர்காலம் எனக்கு ஒன்றும் புரியவில்லை என நினைக்கிறீர்களா, அவை மிகவும் உங்களுக்குத் தெரிந்தவை, தினமும் பயன்படுத்துபவை தான். வாருங்கள் பார்க்கலாம்.

Present continuous tense

அது என்னங்க தொடர் நிகழ்காலம், நாம் இதுவரை பார்த்தவை நான் படிக்கிறேன், நாங்கள் படிக்கிறோம் என்பன ஆனால் இப்போது பார்க்க இருப்பது, இப்போது என்னபன்னுகிறேன்(at present) என்பனவற்றைப் பற்றிப் பகிர present continuous tense பயன்படுகிறது.

முன்பு பார்த்தது போன்றே, முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது எனப் பார்ப்போம்.

  • நான் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
  • நீ படித்துக் கொண்டு இருக்கிறாய்.
  • நாங்கள் படித்துக் கொண்டு இருக்கிறோம்
  • அவன் படித்துக் கெண்டு இருக்கிறான்.
  • அவள் படித்துக் கொண்டு இருக்கிறாள்.
  • அது படித்துக் கொண்டு இருக்கிறது.
  • அவர்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். படி என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். சரி இவை அனைத்தும் நாம் simple present tense லே படித்துத் தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த கொண்டு இருக்கிறேன், கொண்டு இருக்கிறாய் என்பனவற்றை எப்படிச் சொல்ல வேண்டும் எனப் பார்க்கலாம்.

படி என்பதற்கு read எனத் தெரியும், படித்துக் கொண்டு என்பதற்கு verb உடன் ing சேருங்கள் reading எனப்படும். I reading, you reading என்றால் நான் படித்துக் கொண்டு, நீ படித்துக் கொண்டு என்று பொருள். ஆனால் இருக்கிறேன், இருக்கிறாய் என்று எப்படி இங்குக் கூறுவது எனப் பார்த்தோமானால் அதற்குத் தான் simple present tense ல் பார்த்தது போன்று auxiliary verb உள்ளது. அது am, is ,are எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

  • am => I
  • is => he, she, it
  • are => you, we, they

அவ்வளவு தான் நண்பா, நீங்கள் உங்கள் note,pen எடுத்து நீங்கள் அந்த சில மணிநேரத்தை அர்ப்பணிக்கத் தொடங்குங்கள்.

  • I am reading.
  • You are reading.
  • We are reading.
  • He is reading.
  • She is reading.
  • It is reading.
  • They are reading.

ஒரு சிறு குறிப்பு present continuous tense ல் am / is / are + verb + ing

சரி இந்த present continuous tense யை எங்கு எங்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு சிறு குறிப்பு now / at present / still now / at this moment / currently என்பன.

Positive

  • Question : Am I reading?
  • Answer : Yes, I am reading
  • Question : Is he writing?
  • Answer : Yes, he is writing
  • Question : Are they sleeping?
  • Answer : No, they are not sleeping

Negative

  • Question : Isn’t he writing?
  • Answer : Yes, he is not writing
  • Question : Aren’t we running?
  • Answer : no, we are not running
  • Question : Am not i watching?
  • Answer : yes, i’m not watching.

இவ்வளவு தான் நண்பா, Present continuous tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.