Tag Archives: Future continuous

English grammar basics in Tamil – 7

வணக்கம் நண்பர்களே…

என்ன நண்பா தொடர் நிகழ்காலம், தொடர் இறந்த காலம் என்ன என்று சென்ற வலைப்பூவில் அறிந்து கொண்டீர்களா, இன்று நாம் பார்க்க இருப்பது தொடர் எதிர் காலம்(Future continuous tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) present continuous tense, past continuous tense யை பற்றி பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்கு கூறியிருந்தேன். அதைப் போன்றே future continuous tense லும் சில குறிப்புகள் உள்ளது, அவை என்ன என்று பார்க்கலாம்.

Future continuous tense

முன்பு பார்த்தது போன்றே, முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது என பார்ப்போம்.

  • நான் படித்துக் கொண்டு இருப்பேன்.
  • நீ படித்துக் கொண்டு இருப்பாய்.
  • நாங்கள் படித்துக் கொண்டு இருப்போம்.
  • அவன் படித்துக் கெண்டு இருப்பான்.
  • அவள் படித்துக் கொண்டு இருப்பாள்.
  • அது படித்துக் கொண்டு இருக்கும்.
  • அவர்கள் படித்துக் கொண்டு இருப்பார்கள்.

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். படி என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். சரி இவை அனைத்தும் நாம் past continuous tense லே படித்துத் தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த கொண்டு இருப்பேன், கொண்டு இருப்பான் என்பனவற்றை எப்படிச் சொல்ல வேண்டும் எனப் பார்க்கலாம்.

படி என்பதற்கு read எனத் தெரியும், படித்துக் கொண்டு என்பதற்கு verb உடன் ing சேருங்கள் reading எனப்படும். I reading, you reading என்றால் நான் படித்துக் கொண்டு, நீ படித்துக் கொண்டு என்று பொருள். ஆனால் இருப்பேன், இருப்பான் என்று எப்படி இங்குக் கூறுவது எனப் பார்த்தோமானால் அதற்குத் தான் simple future tense ல் பார்த்தது போன்று auxiliary verb உள்ளது. அது shall be / will be எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

  • Shall be => I, We
  • Will be => You, He, She, It, They

அவ்வளவு தான் நண்பா, 

  • I shall be reading.
  • You will be reading.
  • We shall be reading.
  • He will be reading.
  • She will be reading.
  • It will be reading.
  • They will be reading.

ஒரு சிறு குறிப்பு future continuous tense ல் shall be / will be + verb + ing

மிக எளிமையாக இதை புரிந்துக் கொள்ள past continuous tense ல் எங்கு எங்கு was / were பயன்படுத்திநோமோ அதற்கு பதிலாக shall be / will be என சேர்த்தால் போதும்.

சரி இந்த future continuous tense யை எங்கு எங்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு சிறு குறிப்பு By this time tomorrow / at this time next week / by june next year என்பன.

Positive

  • Question : Shall I be reading?
  • Answer : Yes, I shall be reading
  • Question : Will he be writing?
  • Answer : Yes, he will be writing.
  • Question : Will they be sleeping?
  • Answer : No, they will not be sleeping

Negative

  • Question : Won’t he be writing?
  • Answer : Yes, he won’t be writing
  • Question : Shalln’t we be running?
  • Answer : no, we shall not be running
  • Question : Shalln’t i bewatching?
  • Answer : yes, i shall not be watching.

இவ்வளவு தான் நண்பா, Future continuous tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.