English grammar basics in Tamil – 2

என்ன நண்பா சற்று சிந்தித்துத் தெரியவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடன் வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்களுக்கு நியாயமானக கேள்வி என்ன என்று ஞாபகம் இருக்கிறதா. ஆம் Simple present tense ல் do, does எனப் போட்டுக் குழப்புவதுதான்.

நாம் பார்த்த வாக்கியத்தில் நான் படிகிறேன், நாங்கள் படிகிறோம், நீங்கள் படிகிறீர்கள் என்பன அனைத்தும் positive words ஆகும். simple present tense ல் எப்படி negative words ல் எழுதுவது அதாவது நான் படிக்கவில்லை, நாங்கள் படிக்கவில்லை, நீங்கள் படிக்கவில்லை எனப் பார்த்தோமானால் அதற்குத்தான் not என்பது பயன்படுகிறது.

  • do + not + read => do not read
  • does + not + read => does not read

இவ்வளவுதான் நண்பா இந்த do not read மற்றும் does not read எங்கு எல்லாம் பயன் படுத்தவேண்டும் எனப் பார்த்தோமானால் I, We, You, They இவைகளுக்கு do not read என்றும் He, She, It இவைகளுக்கு மட்டும் does not reads எனவும் எழுதவும். உச்சரிக்கும் போதும் அடுத்தவர்களிடம் பேசும் போதும் do not என்பதை don’t எனவும், does not என்பதை doesn’t எனவும் பயன்படுத்த வேண்டும்.

  • நான் படிக்கவில்லை. => I do not read
  • நீ படிக்கவில்லை. => You do not read
  • நீங்கள் படிக்கவில்லை. => You do not read
  • அவன் படிக்கவில்லை. => He does not read
  • அவள் படிக்கவில்லை. => She does not read
  • அது படிக்கவில்லை. => It does not read
  • நாங்கள் படிக்கவில்லை. => We do not read
  • அவர்கள் படிக்கவில்லை. => They do not read
  • அவை படிக்கவில்லை. => They do not read

இப்போது நமக்கு Simple present tenseல் positive wordsலும், negatie wordsலும் எழுதத் தெரியும். பின்பு என்ன நாம் முன்பு பார்த்த வலைப்பூவில்(blog) உள்ள verb(வினைச் சொல்) அனைத்திற்கும் positive மற்றும் negative ல் எழுதி எழுதிப் பாருங்கள். இல்லையெனில் தமக்கு என ஒரு வலைப்பூவை(blog) உருவாக்கி அதில் பதிவிடுங்கள். அதை தமக்கு அனுப்புங்கள்.

தமிழில் ஒரு பழமொழி உள்ளது.

சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

ஒரு குழந்தை தமிழை ஒரே நாளில் பேசாது, அது பேசி பேசி வருடக் கணக்காகும் அல்லவா அது போல ஆங்கிலம் படிக்க வேண்டுமா நான் முன்பு சொன்னதை போலக் கூடுதலாக சில மணிநேரங்கள் அர்ப்பணியுங்கள் பின்பு உங்களிடமே கேட்டுப் பாருங்கள் என்னால் முடியுமா? என நிச்சயம் பதில் உங்களிடமே கிடைக்கும்.

பயிற்ச்சி

(எ.கா) எடு, துலக்கு, குளி, மாற்று, சாப்பிடு, கழுவு, உட்கார், படி, போ, வாங்கு, திரும்பு, வை, பார்.

Take, brush, bath, change, eat, sit, read, study, go, buys, turn, see.

எடு – take

  • நான் எடுக்கிறேன். => I take
  • நீ எடுக்கிறாய். => You take
  • நீங்கள் எடுக்கிறீர்கள். => You take
  • அவன் எடுக்கிறான். =>He takes
  • அவள் எடுக்கிறாள். =>She takes
  • அது எடுக்கிறது. => It takes
  • நாங்கள் எடுக்கிறோம். => We take
  • அவர்கள் எடுக்கிறார்கள்.=> They take
  • அவை எடுக்கின்றன. => They take
  • நான் எடுக்கவில்லை. => I do not take
  • நீ எடுக்கவில்லை. => You do not take
  • நீங்கள் எடுக்கவில்லை. => You do not take
  • அவன் எடுக்கவில்லை. =>He does not take
  • அவள் எடுக்கவில்லை. =>She does not take
  • அது எடுக்கவில்லை. => It does not take
  • நாங்கள் எடுக்கவில்லை. => We do not take
  • அவர்கள் எடுக்கவில்லை.=> They do not take
  • அவை எடுக்கவில்லை. => They do not take

துலக்கு-Brush

  • I brush
  • We brush
  • You brush
  • He brushes
  • She brushes
  • It brushes
  • They brush

  • I do not brush
  • We do not brush
  • You do not brush
  • He does not brush
  • She does not brush
  • It does not brush
  • They do not brush

மாற்று-change

  • I change
  • We change
  • You change
  • He changes
  • She changes
  • It changes
  • They change
  • I do not change
  • We do not change
  • You do not change
  • He does not change
  • She does not change
  • It does not change
  • They do not change

சாப்பிடு-eat

  • I eat
  • We eat
  • You eat
  • He eats
  • She eats
  • It eats
  • They eat
  • I do not eat
  • We do not eat
  • You do not eat
  • He does not eat
  • She does not eat
  • It does not eat
  • They do not eat

மேலும் இது போன்று பலவற்றை எழுதியும், பேசியும், நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியும் வாருங்கள். கண்டிப்பாக ஆங்கிலம் எளிமையே.

கேள்வி கேட்பது எப்படி ?

சரி இப்போது simple present tense ல் எப்படி நான் எனது நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கேள்வி கேட்பது என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஆங்கிலம் மீது ஒரு பற்று வந்து விட்டது என்று தானே அர்த்தம். அதையும் சொல்லி விடுகிறேன் முழுமையாகப் பேசி மகிழுங்கள்.

நாம் தமிழில் கேள்வி கேட்போம் அவன் எழுதுகிறானா?, அவள் எழுதுகிறாளா?, அது எழுதுகிறதா? என அதற்கு ஆம் (அ) இல்லை என்ற பதிலை நீங்கள் கேட்பவர் பதில் கூறுவார்.

அவ்வளவுதானே மிக எளிமையான கேள்வி, நமக்கு ஏற்கனவே தெரியும் He + does + read => He reads என மாறி அவன் படிக்கின்றான் என மாறியது. அவன் படிக்கிறானா? என நாம் மற்றவர்களிடம் கேட்க Does + he + read => Does he read? என்று கேட்கவும். அதற்கான பதிலை ஆம் என்றால் yes எனவும் இல்லை என்றால் no எனவும் சொல்லவும்.

Positive

  • Question: Does he write? அவன் எழுதுகிறானா?
  • Answer : Yes, he writes ஆம், அவன் எழுதுகிறான்.
  • Question : Do they read? அவர்கள் படிக்கிறார்களா?
  • Answer : No, they do not read இல்லை, அவர்கள் படிக்கவில்லை
  • Question : Does she take? அவள் எடுக்கிறாளா?
  • Answer : No, she does not take இல்லை, அவள் எடுக்கவில்லை.

Negative

  • Question : Don’t I write? நான் எழுதவில்லையா?
  • Answer : Yes, I do not write. ஆம், நான் எழுதவில்லை.
  • Question : Doesn’t he read? அவன் படிக்கவில்லையா?
  • Answer : No, he does not read இல்லை, அவன் படிக்கவில்லை
  • Question : Don’t they take? அவர்கள் எடுக்கவில்லையா?
  • Answer : Yes, they do not take. ஆம், அவர்கள் எடுக்கவில்லை.

இவ்வளவு தான் நண்பா, Simple present tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். நாம் simple present tense ல் மிக முக்கியமானவை Do / Does மட்டுமே. அவற்றை முறையாகப் பேசி பழகி சில மணிநேரத்தை அர்ப்பணியுங்கள்.

அடுத்துப் பார்க்க இருக்கும் tenseயை வைத்து ஒரு முழு படத்தின் கதையையே சொல்லிவிடலாம் அவை என்ன என்று சிந்தித்து கரும்பலகையில் பதிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

2 thoughts on “English grammar basics in Tamil – 2”

Leave a comment