Tag Archives: easy to uderstand

English grammar basics in Tamil – 10

வணக்கம் நண்பர்களே…

என்ன நண்பா present perfect, Past perfect எப்படி என்ன என்று தெரிந்து கொண்டீர்களா, இப்போது நாம் பார்க்க இருப்பது Future perfect எனப்படும். இவை முன்பு பார்த்ததை விட மிக மிக எளிமையானது.

Future perfect tense

present perfect ல் இரண்டு auxiliary verb பார்த்தோம், past perfect ல் ஒரே auxiliary verb பார்த்தோம் அது போன்று இதிலும் ஒன்று உள்ளது. அது Will have எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

  • will have => i, we, you ,they, he, she, it

ஒரு சிறு குறிப்பு

I,We,You,They,he,she,it + Will have + verb(3rd form)

சரி இந்த future perfect tense யை எங்கு எங்குப் பயன்படுத்த வேண்டும் என ஒரு சிறு குறிப்பு I will have gone to Kashmir by next may / He will have written the letter / They will have gone to Dubai / By next year may, we shall have elections in Tamilnadu என்பன.

Future perfect க்கு மிக முக்கியமான key word – by என்பது, by க்கு பிறகு வருபவை கண்டிப்பாக future யை குறிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

முன்பு சொன்னது தான், எனக்குத் தெரிந்த வரை past perfect மற்றும் future perfect போன்றவை அதிகம் பயன்படுத்துவது இல்லை. ஆனால் பின்பு ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா, இலக்கணத்தில் தெரியவில்லை என்றால் மற்றவர் பேசும் போது என்ன என்று தெரியாமல் நிற்கக் கூடாது அல்லவா அதனால் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது 45% வரை அடிப்படை ஆங்கிலம் என்பது தெரிந்து வைத்துள்ளோம். இதில் எப்படி முழுமை அடைவது என்பனவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு auxiliary verb யை பற்றி சற்று பார்ப்போம்.

Auxiliary verb

நாம் இது வரை பார்த்தவை

am, is, are, was, were, shall, will

  • am – இருக்கிறேன்
  • is – இருக்கிறான் / இருக்கிறாள் / இருக்கிறது
  • are – இருக்கிறோம் / இருக்கிறார்கள் / இருக்கிறீர்கள்

தமிழில் நீ யார்? என்ற கேள்விக்கு நான் கண்ணன் என்றாலே புரிந்துவிடும்.

ஆனால் ஆங்கிலத்தில் யோசிப்பதாக இருந்தால் எப்படி என்று பார்ப்போம்.

present

  • நான் கண்ணன் – I kannan (தவறு)
  • நான் கண்ணன் ஆக இருக்கிறேன். – I am kannan (சரி)

past

  • அவன் முன்பு குழந்தையாக இருந்தான்.
  • he was a child earlier

இது போன்று அதிகமான ஆங்கில வார்த்தை தெரிந்து கொள்ள word power made easy என்ற புத்தகத்தை pdf ல் download செய்து படியுங்கள்.

இது வரை பார்த்தவையே ஒருவர் ஆங்கிலத்தில் interview (அ) நண்பர்களிடம் உரையாடுவதற்கு போதுமானவை. மேலும் நான் மேலே கூறிவுள்ள புத்தகத்தை படித்து பல வாக்கியத்தை உருவாக்கி எனக்கு அனுப்புங்கள். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்கு கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

English grammar basics in Tamil – 9

வணக்கம் நண்பர்களே…

என்ன நண்பா present perfect எப்படி என்ன என்று தெரிந்து கொண்டீர்களா, இப்போது நாம் பார்க்க இருப்பது past perfect எனப்படும். இவை present perfectயை விட மிக மிக எளிமையானது.

Past perfect tense

present perfect ல் இரண்டு auxiliary verb பார்த்தோம் அல்லவா ஆனால் past perfect ல் ஒரே auxiliary verb தான். அது had எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம் மற்றும் நாம் புதிதாகப் படித்த Third Form * (Past participle) யை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

  • had => I, We, You, He, She, It, They.

அவ்வளவு தான் நண்பா, அனைத்திற்கும் had சேர்க்க வேண்டும்.

  • I had seen
  • We had seen
  • You had seen
  • He had seen
  • She had seen
  • It had seen
  • They had seen

ஒரு சிறு குறிப்பு I,We, You, He, She, It, They + had + verb(3rd form)

Positive

  • Question : Had I seen?
  • Answer : Yes, I had seen
  • Question : Had He drunk?
  • Answer : Yes, he had drunk
  • Question : Had they studied?
  • Answer : yes, they had studied.

Negative

  • Question : Had not you gone?
  • Answer : Yes, you had not gone
  • Question : Hadn’t she listened?
  • Answer : Yes, she hadn’t listened
  • Question : had he eaten?
  • Answer : No, he had not eaten

எனக்குத் தெரிந்த வரை past perfect மற்றும் அடுத்துப் பார்க்க இருக்கும் future perfect போன்றவை அதிகம் பயன்படுத்துவது இல்லை. ஆனால் பின்பு ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா, இலக்கணத்தில் தெரியவில்லை என்றால் மற்றவர் பேசும் போது என்ன என்று தெரியாமல் நிற்கக் கூடாது அல்லவா அதனால் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வளவு தான் நண்பா, Past perfect tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

English grammar basics in Tamil – 8

வணக்கம் நண்பர்களே…

இது வரை நாம் பார்த்தவற்றை நினைவு கூறுகிறேன்.

  1. Simple Present Tense
    • நான் படிக்கிறேன்.
  2. Simple Past Tense
    • நான் படித்தேன்.
  3. Simple Future Tense
    • நான் படிப்பேன்.
  4. Present Continuous Tense
    • நான் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
  5. Past Continuous Tense
    • நான் படித்துக் கொண்டு இருந்தேன்.
  6. Future Continuous Tense
    • நான் படித்துக் கொண்டு இருப்பேன்.

Present perfect tense

இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் Present perfect tense எனப்படும். அது என்னங்க புதிதாக perfect என்று சொல்லி குழப்புகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, நான் அவை என்ன என்று தமிழில் கூறுகிறேன் பின்பு இவை உங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று சொல்லுங்கள். நான் படித்து இருக்கிறேன் இவ்வாறு ஆங்கிலத்தில் கூறுவதற்குத் தான் இந்த Perfect பயன்படுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த காலத்தில் ஏதோ ஒரு முறை செய்யப்பட்டு அவை நிகழ்காலம் வரை நினைவில் இருப்பதைப் பற்றி மற்றவர்களுக்குப் பகிர இந்த present perfect பயன்படுகிறது. இதிலும் சில குறிப்புகள் உள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.

First Form
(Present)
Second Form
(Past)
Third Form *
(Past participle)
Fourth Form
(Present participle)
WriteWroteWrittenWritting
StudyStudiedstudiedStudying
SpeakSpokeSpokenSpeaking
ListenListenedListenedListening
Type TypedTypedTyping
SwitchSwitchedSwitchedSwitching
eatateeateneating
cookcookedcookedcooking
gowentgonegoing
drinkdrankdrunkdrinking
buyboughtboughtbuying

இது போன்று உங்களுக்கு அதிகமான வார்த்தைகள் தெரியும், அவற்றை blog (or) note ல் எழுதுங்கள். verb தெரியும் ஆனால் இந்த second form, third form தெரியாது என்று நினைக்கிறீர்களா அதைத்தான் Simple past tense லே பார்த்தோமோ தெரியாத வார்த்தைக்கு did + verb என்று வைத்துக் கொள்ளுங்கள் பின்பு அதை online ல் நமக்குத் தெரியாதவற்றைத் தேடிப்பாருங்கள், ஆனால் அவற்றை அப்படியே வைத்துப் பயன்படுத்தாமல் முறையான வாக்கியத்தைத் தேடுங்கள் அப்போது தான் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். fourth form மிக எளிமை verb உடன் ing சேர்த்து எழுதுங்கள்.

  • நான் எழுதி இருக்கிறேன்
  • நீ எழுதி இருக்கிறாய்.
  • நாங்கள் எழுதியிருக்கிறோம்.
  • அவன் எழுதியிருக்கிறான்.
  • அவள் எழுதியிருக்கிறாள்.
  • அது எழுதியிருக்கிறது.
  • அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் இருக்கிறேன், இருப்பான் என்று எப்படி இங்குக் கூறுவது எனப் பார்த்தோமானால் அதற்குத் தான் present continuous tense ல் பார்த்தது போன்று auxiliary verb உள்ளது. அது have / has எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம் மற்றும் நாம் புதிதாகப் படித்த Third Form *(Past participle) யை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்

  • have => I ,You, We, They
  • has => He, She, It

அவ்வளவு தான் நண்பா, 

  • I have written.
  • You have written.
  • We have written.
  • He has written.
  • She has written.
  • It has written.
  • They have written.

ஒரு சிறு குறிப்பு

I, We, You, They + have + verb(3rd form)

He, she, it + has + verb(3rd form)

சரி இந்த present perfect tense யை எங்கு எங்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு சிறு குறிப்பு never / yet / just now / ever / have you watched the movie ever? / I bet, you have never watched such movie / already I have seen this movie / already I have written once என்பன.

Positive

  • Question : Have I written?
  • Answer : Yes, I have written
  • Question : Has he gone?
  • Answer : yes, he has gone
  • Question : Have they cooked?
  • Answer : yes, they have cooked

Negative

  • Question: Have I written?
  • Answer : No, I haven’t written.
  • Question : Haven’t they spoken?
  • Answer : Yes, they haven’t spoken.
  • Question : Hasn’t she studied?
  • Answer : Yes, she hasn’t studied.

இவ்வளவு தான் நண்பா, Present perfect tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

English grammar basics in Tamil – 7

வணக்கம் நண்பர்களே…

என்ன நண்பா தொடர் நிகழ்காலம், தொடர் இறந்த காலம் என்ன என்று சென்ற வலைப்பூவில் அறிந்து கொண்டீர்களா, இன்று நாம் பார்க்க இருப்பது தொடர் எதிர் காலம்(Future continuous tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) present continuous tense, past continuous tense யை பற்றி பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்கு கூறியிருந்தேன். அதைப் போன்றே future continuous tense லும் சில குறிப்புகள் உள்ளது, அவை என்ன என்று பார்க்கலாம்.

Future continuous tense

முன்பு பார்த்தது போன்றே, முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது என பார்ப்போம்.

  • நான் படித்துக் கொண்டு இருப்பேன்.
  • நீ படித்துக் கொண்டு இருப்பாய்.
  • நாங்கள் படித்துக் கொண்டு இருப்போம்.
  • அவன் படித்துக் கெண்டு இருப்பான்.
  • அவள் படித்துக் கொண்டு இருப்பாள்.
  • அது படித்துக் கொண்டு இருக்கும்.
  • அவர்கள் படித்துக் கொண்டு இருப்பார்கள்.

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். படி என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். சரி இவை அனைத்தும் நாம் past continuous tense லே படித்துத் தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த கொண்டு இருப்பேன், கொண்டு இருப்பான் என்பனவற்றை எப்படிச் சொல்ல வேண்டும் எனப் பார்க்கலாம்.

படி என்பதற்கு read எனத் தெரியும், படித்துக் கொண்டு என்பதற்கு verb உடன் ing சேருங்கள் reading எனப்படும். I reading, you reading என்றால் நான் படித்துக் கொண்டு, நீ படித்துக் கொண்டு என்று பொருள். ஆனால் இருப்பேன், இருப்பான் என்று எப்படி இங்குக் கூறுவது எனப் பார்த்தோமானால் அதற்குத் தான் simple future tense ல் பார்த்தது போன்று auxiliary verb உள்ளது. அது shall be / will be எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம்.

  • Shall be => I, We
  • Will be => You, He, She, It, They

அவ்வளவு தான் நண்பா, 

  • I shall be reading.
  • You will be reading.
  • We shall be reading.
  • He will be reading.
  • She will be reading.
  • It will be reading.
  • They will be reading.

ஒரு சிறு குறிப்பு future continuous tense ல் shall be / will be + verb + ing

மிக எளிமையாக இதை புரிந்துக் கொள்ள past continuous tense ல் எங்கு எங்கு was / were பயன்படுத்திநோமோ அதற்கு பதிலாக shall be / will be என சேர்த்தால் போதும்.

சரி இந்த future continuous tense யை எங்கு எங்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு சிறு குறிப்பு By this time tomorrow / at this time next week / by june next year என்பன.

Positive

  • Question : Shall I be reading?
  • Answer : Yes, I shall be reading
  • Question : Will he be writing?
  • Answer : Yes, he will be writing.
  • Question : Will they be sleeping?
  • Answer : No, they will not be sleeping

Negative

  • Question : Won’t he be writing?
  • Answer : Yes, he won’t be writing
  • Question : Shalln’t we be running?
  • Answer : no, we shall not be running
  • Question : Shalln’t i bewatching?
  • Answer : yes, i shall not be watching.

இவ்வளவு தான் நண்பா, Future continuous tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

English grammar basics in Tamil – 3

வணக்கம் நண்பர்களே…

நான் உங்களிடம் கூறியிருந்தேன் ஒரு படத்தின் கதையை ஆங்கிலத்தில் சொல்ல எளிமையான tense உள்ளது என்று, அது வேறு எதுவும் அல்ல Simple past tense தான். Simple present tense யை விட Simple past tense மிக மிக எளிமையானது, simple present tense ல் நிகழ்காலத்தில் நடப்பனவற்றைப் பற்றிப் பேசி மகிழ்ந்திருப்பீர்கள், அத்துடன் கடந்த காலத்தைப் பற்றியும் உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பேசி மகிழ இன்னும் சில நிமிடமே உள்ளது.

Simple past tense

முன்பு பார்த்தது போன்றே, முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது எனப் பார்ப்போம்.

  • நான் எழுதினேன்
  • நீ எழுதினாய்
  • நாங்கள் எழுதினோம்
  • அவன் எழுதினான்
  • அவள் எழுதினாள்
  • அது எழுதியது
  • அவர்கள் எழுதினார்கள்

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். எழுது என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். இங்குப் பார்த்தோமானால் இரண்டு வார்த்தை உள்ளது அவற்றை இப்படி எழுதலாமா எனப் பாருங்கள்.

  • நான் எழுதினேன் => எழுது + இனேன்
  • நீ எழுதினாய் => எழுது + இனாய்
  • நாங்கள் எழுதினோம் => எழுது + இனோம்
  • அவன் எழுதினான் => எழுது + இனான்
  • அவள் எழுதினாள் => எழுது + இனாள்
  • அது எழுதியது => எழுது + இயது
  • அவர்கள் எழுதினார்கள் => எழுது + இனார்கள்

Simple present tense ல் do/ does என இரண்டை பற்றிப் பார்த்தோம். அதைப்போன்றே Simple past tense ல் did என ஒன்றே போதுமானது.

  • நான் எழுதினேன் => I did write
  • நீ எழுதினாய் => You did write
  • நாங்கள் எழுதினோம் => We did write
  • அவன் எழுதினான் => He did write
  • அவள் எழுதினாள் => She did write
  • அது எழுதியது => It did write
  • அவர்கள் எழுதினார்கள் => They did write

இதில் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது, எப்படி Simple present tense ல் do+write(verb)=>write எனவும் does+write(verb)=> writes என எழுதினோமோ அதைப்போன்றே simple past tense ல் verb க்கு second form என்று உள்ளது அதைப் பொறுத்து Simple past tense ல் பேசவும், எழுதவும் வேண்டும். சற்று குழப்புவது போன்று உள்ளதா அது என்ன என்று கூறுகிறேன், இதுதானா என நீங்கள் நினைப்பீர்கள்.

First FormSecond Form
WriteWrote
SleepSlept
ListenListened
TypeTyped
eatate
cookcooked
drinkdrank
sitsat
standstood

இது மாதிரி நிறைய வார்த்தைகள் நமக்குத் தெரியும் அந்த வார்த்தைகளுக்கு second form என்ன என்று தெரிந்தால் போதும். இப்போது மேலே உள்ளவை அனைத்தும் உங்களுக்குத் தெரியும், இது போன்று அதிகமான வார்த்தைகள் உங்களுக்கு உண்மையாகவே தெரியும் நான் இப்போது கூறும் வலைத்தளத்தில் சென்று உங்களுக்குத் தெரிந்தவை, தெரியாதவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். www.grammar.cl அனைவரும் நினைத்துக்கொள்வது நமக்கு ஆங்கிலம் தெரியவில்லை அதனால் தான் பேச முடியவில்லை என்று அது முழுக்க முழுக்க மூடநம்பிக்கையே. இந்த பக்கத்தைப் பாருங்கள் உறுதியாக 50% வார்த்தை தெரியும்.

சரி இந்த past tense ல் சிலவற்றைச் சுலபமாகப் புரிந்து கொண்டேன், ஆனால் write – wrote, sleep – slept, eat – ate, drink – drank, sit – sat என மாற்றுவதில் எனக்குச் சிரமம் இருக்கிறது என உணருகிறீர்களா, ஒன்றும் சிரமம் இல்லை அந்த verb உடன் ed சேர்த்து எழுதலாம் ஆனால் அவ்வாறு எழுதுவது முறையை மாற்றி அமைக்கும் என்பதால் did write எனவும் எழுதலாம். write என்பதற்கு wrote என தெரியவில்லை என அச்சம் வேண்டாம் நமக்கு முன்பு தெரிந்தது போன்றே did என எழுதி அந்த verb யை அப்படியே எழுதவும். குறிப்பாக verb உடன் s, es ,ed எனச் சேர்த்து எழுதக் கூடாது மற்றும் இதைத் தவிர்க்க முடியாத நிலையில் உபயோகப்படுத்துவதில் தவறு இல்லை, முடிந்த வரை verb ன் second form யை பயன்படுத்துவது நல்லது.

Positive

  • Question : Did he write? அவன் எழுதினானா?
  • Answer : Yes, he wrote / Yes, he did write ஆம், அவன் எழுதினான்.
  • Question : Did I sleep? நான் தூங்கினேனா?
  • Answer: Yes, I did sleep ஆம், நான் தூங்கினேன்.
  • Question : Did they eat? அவர்கள் சாப்பிட்டார்களா?
  • Answer : yes, they ate ஆம், அவர்கள் சாப்பிட்டார்கள்.

Negative

  • Question : Didn’t he sleep? அவன் தூங்கவில்லையா?
  • Answer : No, he did sleep இல்லை, அவன் தூங்கிவிட்டான்.
  • Question : Didn’t it go? அது போகவில்லையா?
  • Answer : Yes, it didn’t go ஆம், அது போகவில்லை.
  • Question : Yesterday, didn’t he write? நேற்று, அவன் எழுதவில்லையா?
  • Answer : Yes, he didn’t write ஆம், அவன் எழுதவில்லை.

இவ்வளவு தான் நண்பா, Simple past tense ல் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டோம். மேலும் இதில் எவையேனும் விடுபட்டால். எனக்குக் கருத்து பலகை (Comment) மூலம் தெரிவியுங்கள் மற்றும் உங்களின் வலைப்பூவை (BLOG) எனக்கு மின்னஞ்சல்(Email) வழியாக அனுப்பிவிடுங்கள். நாம் simple past tense ல் மிக முக்கியமானவை Did மட்டுமே. அவற்றை முறையாகப் பேசி பழகி சில மணிநேரத்தை அர்ப்பணியுங்கள். மீண்டும் சந்திப்போம்.

English grammar basics in Tamil -1

வணக்கம் நண்பர்களே…

நாம் பார்க்க இருக்கும் இந்த வலைப்பூவில்(Blog) ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது, எப்படி உச்சரிப்பது, எப்படிப் பேசுவது போன்றவற்றைப் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம். இந்த வலைப்பூவில் முழுக்க முழுக்க ஆங்கிலம் என்றாலே பயம் என்பவர்க்கும், ஆங்கிலத்தில் ஒரு வாக்கியமும் (Sentence) எழுதத் தெரியாது என்பவர்க்கு (அ) தமிழ் வழியில்(Tamil Medium) பள்ளிக்கூட வாழ்க்கையை முடித்ததால் ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைப்பவர்க்கு மற்றும் மிக மிக அடித்தளத்தில் இருக்கும் நண்பர்களுக்கும், கிராமப் புற நண்பர்களுக்கும் எளிமையில் புரியும் வகையில் நான் எனது அனுபவத்தைப் பகிர்கின்றேன். நான் உறுதியாகக் கூறுகிறேன் தமிழைப் போன்றே ஆங்கிலமும் மிக எளிமையானது அதை நீங்கள் 100% நம்பலாம். இது எனது புதிய முயற்சி எவையேனும் மாற்றம் (அ) கருத்துகள் இருந்தால் கருத்து பலகை (Comment) மூலம் கருத்துகளைப் பதிவிடுங்கள்.

என்னால் முடியுமா?

ஒரே நாளில் சாதித்தவர்கள் என்று யாரும் கிடையாது. அனைவரும் பல நாட்கள், பல மணிநேரங்கள் அவர்களது இலக்கில் அர்ப்பணித்துத் தானே சாதனை படைத்திருப்பார்கள். அது போல நீங்களும் பல நாட்கள், பல மணிநேரங்கள் அர்ப்பணியுங்கள் என்று சொல்லமாட்டேன், ஒரு நாட்களுக்கு ஒரு மணிநேரம் அதாவது உங்கள் மனம் அமைதியாக இருக்கும் நிலையில் ஒரு மணிநேரம் அர்ப்பணியுங்கள். பின்பு தான் என்னால் முடியுமா என்ற கேள்விக்குப் பதில் உங்களிடமே கிடைக்கும். மற்றவர்கள் உன்னால் முடியும் என்று கூறுவதைவிட நம் மனதில் உருவாகும் நம்பிக்கைக்கு ஈடு இணையே இல்லை. அதை நான் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் அந்த சில மணிநேரம் கொடுத்தீர்களா என்பதை உங்களிடம் கேட்டுப் பாருங்கள்?

ஆங்கிலம் யாருக்குக் கடினம், யாருக்கு எளிமை?

ஆங்கிலம் கற்றல் என்பது யார்க்கு மிகமிக கடினம், யார்க்கு மிகமிக எளிமை என்பதைப் பார்த்தோமானால் ஒரு குழந்தைக்கு மிகமிக கடினம், ஏனென்றால் அந்த குழந்தைக்கு ஏற்கனவே ஒரு மொழி கூட தெரிந்து இருக்காது, அதனால் மற்றொரு மொழி கற்றல் என்பது மிக மிகக் கடினம். ஆனால் நமக்கு அத்தகைய கடினமில்லை ஏனென்றால் நமக்கு ஏற்கனவே மிகப் பெரிய மொழியான தாய்மொழி தமிழ் நமக்குத் தெரியும். தமிழுக்கு மற்றும் அல்ல யாருக்கு எல்லாம் ஒரு மொழி ஏற்கெனவே தெரிந்திருக்கிறதோ அவர்கள் மற்றொரு மொழி படிப்பதில் எந்தவித சிரமமும் இருக்காது.முதலில் நமது திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம்…

ஆங்கிலத்திற்கு மிக மிக அடித்தலமாக இருப்பது Tenses எனப்படும். அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அடிப்படியாகத் தெரிந்திருக்க வேண்டியவை சிலவற்றைக் காணலாம்.

  1. Tenses
    1. Simple present
    2. Simple past
    3. Simple Future
    4. Present Continuous
    5. Past Continuous
    6. Future Continuous
    7. Present perfect
    8. Past perfect
    9. Future perfect
    10. Present perfect continuous
    11. Past perfect continuous
    12. Future perfect continuous
  2. Sentence Patten
  3. Active voice
  4. Passive voice
  5. Direct speech
  6. Indirect speech
  7. Simple,Complex,Compound

இவைதான் நாம் படிக்க இருக்கும் பொருளடக்கம் எனலாம். இதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வேறு எதுவும் இல்லை. இப்போது பார்த்தால் Grammar இல்லாமலே நன்றாகப் பேசலாம், மற்றவர்கள் பேசுவதையும் புரிந்து கொள்ளலாம். இது யாருக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் எனப் பார்த்தோமானால், கண்டிப்பாக  மின்னஞ்சல்(Email) எழுதுபவர்களுக்கும், எவையேனும் கட்டுரை(Essay) எழுதுபவர்களுக்கும் பயன்படும். நன்றாகப் பயிற்சி செய்பவர்க்கு ஆங்கிலம் மீது உள்ள அச்சமோ, வெறுப்போ கண்டிப்பாகக் குறையும்.

Simple Present Tense

முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி ஆங்கிலத்தில் மாற்றுவது எனப் பார்ப்போம்.

  • நான் படிக்கிறேன்.
  • நீ படிக்கிறாய்.
  • நீங்கள் படிக்கிறீர்கள்.
  • அவன் படிக்கிறான்.
  • அவள் படிக்கிறாள்.
  • அது படிக்கிறது.
  • நாங்கள் படிக்கிறோம்.
  • அவர்கள் படிக்கிறார்கள்.
  • அவை படிக்கின்றன.

இப்போது மேலே உள்ளவற்றில் (நான்,நீ,நீங்கள்,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்,அவை) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,Your,He,She,It,We,They) என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். படி என்பதற்கும் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். இங்குப் பார்த்தோமானால் இரண்டு வார்த்தை உள்ளது அவற்றை இப்படி எழுதலாமா எனப் பாருங்கள்.

  • நான் படிக்கிறேன். => படி + கிறேன்
  • நீ படிக்கிறாய். => படி + கிறாய்
  • நீங்கள் படிக்கிறீர்கள். => படி + கிறீர்கள்
  • அவன் படிக்கிறான். => படி + கிறான்
  • அவள் படிக்கிறாள். => படி + கிறாள்
  • அது படிக்கிறது. => படி + கிறது
  • நாங்கள் படிக்கிறோம். => படி + கிறோம்
  • அவர்கள் படிக்கிறார்கள். => படி + கிறார்கள்
  • அவை படிக்கின்றன. => படி + கின்றன

படி என்பதற்கு ஆங்கிலத்தில் (Study, Read) எனலாம். நாம் read என வைத்தோமானால் நான் படி, நீ படி, நீங்கள் படி எனச் சொல்ல முடியாது அல்லவா அப்போது எப்படிச் சொல்லவேண்டியது இருக்கும் நான் படிக்கிறேன், நீ படிக்கிறாய், நீங்கள் படிகிறீர்கள் என்று தானே சொல்லுவோம். படி எனத் தமிழில் எழுதுவதற்குத் தான் வினைச்சொல்(verb) என்று பெயர். கிறேன்,கிறாய் என உடன் எழுதுகிறோம் அல்லவா அதற்குத் துணை வினைச்சொல்(auxiliary verb) என்று பெயர்.

  • படி – வினைச் சொல் => verb
  • கிறீர்கள், கிறார்கள், கிறோம் – துணை வினைச்சொல் => auxiliary verb

இப்போது (நான்,நீ,நீங்கள்,அவன்,அவள்,அது,நாங்கள்,அவர்கள்,அவை) இவைகளுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் (I, You,Your,He,She,It,We,They) என்ன என்று தெரியும் மற்றும் படி என்பதற்கு read என்று தெரியும் அல்லவா. இதனுடன் (கிறீர்கள், கிறார்கள், கிறோம்) என்பதற்கும் ஆங்கிலத்தில் தெரிந்துவிட்டால் இன்று நமக்கு simple present tense முடிந்தது என அர்த்தம் அவை இன்னும் சில நிமிடங்களில் முடிந்து விடும்.

கிறீர்கள், கிறார்கள், கிறோம் என்பதற்கான auxiliary verb என்னவென்று பார்த்தோமானால் do மற்றும் does , இந்த do மற்றும் does உடன் verb சேர்த்தோமானால் முடிந்தது.

  • do + read => read
  • does + read => reads

இவ்வளவுதான் நண்பா இந்த read மற்றும் reads எங்கு எல்லாம் பயன் படுத்தவேண்டும் எனப் பார்த்தோமானால் I, We, You, They இவைகளுக்கு அப்படியே read என்றும் He, She, It இவைகளுக்கு மட்டும் reads என எழுதவும்.நீங்கள் உங்கள் note,pen எடுத்து நீங்கள் அந்த சில மணிநேரத்தை அர்ப்பணிக்கத் தொடங்குங்கள்.

  • நான் படிக்கிறேன். => படி + கிறேன் => I read
  • நீ படிக்கிறாய். => படி + கிறாய் => You read
  • நீங்கள் படிக்கிறீர்கள். => படி + கிறீர்கள் => You read
  • அவன் படிக்கிறான். => படி + கிறான் => He reads
  • அவள் படிக்கிறாள். => படி + கிறாள் => She reads
  • அது படிக்கிறது. => படி + கிறது => It reads
  • நாங்கள் படிக்கிறோம். => படி + கிறோம் => We read
  • அவர்கள் படிக்கிறார்கள். => படி + கிறார்கள் => They read
  • அவை படிக்கின்றன. => படி + கின்றன => They read

இதே மாதிரி நீங்களும் எழுதிப் பாருங்கள். எதைப்பற்றி எழுதுவது எனத் தெரியவில்லையா நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இதுவரை என்ன செய்தீர்களோ அதை முதலில் தமிழில் அந்த verbயை மட்டும் எழுதுங்கள் பின்பு ஆங்கிலத்தில் அதை மாற்றுங்கள். (எ.கா) எழு, துலக்கு, குளி, மாற்று, சாப்பிடு, கழுவு, உட்கார், படி, போ, வாங்கு, திரும்பு, வை, பார், எடு, அனுப்பு, சிரி இங்கு உள்ள அனைத்திற்கும் உங்களுக்கு ஆங்கிலத்தில் தெரியும் அல்லவா.

அவ்வளவு தான் simple present tense முடிந்தது. ஒன்றுமே இல்லை அல்லவா He, She, It வந்தால் verb உடன் s சேருங்கள் என்று சுலபமாக முடித்திருக்கலாமே… என்று தானே நினைக்கிறீர்கள். அப்படி நினைத்தால் நீங்கள் சரியாக simple present tenseயை படித்து முடித்துவிட்டீர்கள். சரி எதற்காக do, does எனப் போட்டுக் குழப்புகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது நியாயமான கேள்விதான். நீங்களும் சற்று சிந்தித்துப் பாருங்கள் இல்லை என்றால் ஏனென்று தெரிந்து கொள்ள English grammar basics in tamil – 2 வை பாருங்கள்.